
எங்கே?
A new novel from Norway
Versandkostenfrei!
Versandfertig in über 4 Wochen
28,99 €
inkl. MwSt.
PAYBACK Punkte
14 °P sammeln!
எங்கே? - நாவல் முற்றிலும் வேறுபட்டதாக அமைகின்றது. இரண்டு தலைமுறைகளின் கதை. ஒருவனே மகனாகவும், அப்பனாகவும் வாழும் கதை. கதையின் ஒருபகுதி சுபனின் தந்தையாக வாழும் நோர்வே நாட்டில் நிகழ்கின்றது, அடுத்தது மகன் தேவனாய் வாழ்ந்த காரை...
எங்கே? - நாவல் முற்றிலும் வேறுபட்டதாக அமைகின்றது. இரண்டு தலைமுறைகளின் கதை. ஒருவனே மகனாகவும், அப்பனாகவும் வாழும் கதை. கதையின் ஒருபகுதி சுபனின் தந்தையாக வாழும் நோர்வே நாட்டில் நிகழ்கின்றது, அடுத்தது மகன் தேவனாய் வாழ்ந்த காரைநகரில் நிகழ்வது. பொன்னாலைப்பாலம் தொடுப்பதினாலே, நகரான ஒரு தீவின் செழுமைகளும் பெருமிதங்களும்! அதன் ஆன்மாவைச் சுவாசிக்கும் மக்கள், கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், மரபு சார்ந்த நம்பிக்கைகள், கோயில்கள், வயல்கள், நீருக்கு ஏங்கும் கிணறுகள் மட்டுமல்ல... வலந்தலை, களபூமி, மாவெட்டை என்று அம்மண்ணின் குறிச்சிகளின் பெயர்களும் விசிறியெறியப் படுகின்றன. இவற்றுடன் மண்ணின் மைந்தரின் அரசியல் சார்பு, அவர்களைப் பாதித்த தமிழினப் பிரச்சினைகள் ஆகியன பிரசாரத் தொனியின்றி, அதேசமயம் மண்மீது கொண்ட பாசம் சற்றேனும் பழுதுபடாத நுட்பத்தில் சித்தரிக்கப்படுகின்றன. தான் பிறந்த மண்ணை, அதன் அற்புத புழுதி வாசனைகளுடனும் எழுதப்பட்ட பிறிதொரு நாவலை நான் தமிழில் இதுவரை வாசிக்கவில்லை. என்று அமரர் எஸ்.பொ அவர்களால் நவிலப்பட்ட நாவல் இது.